2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

விசாரணைகளை ஆரம்பித்தது ஆணைக்குழு

Editorial   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அதன் விசாரணைகளை இன்று(17) ஆரம்பித்ததுள்ளது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.

கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில், ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினூடாக சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. முன்னாள் கடற்படை அதிகாரி உள்ளிட்ட பலர் தமது முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, இம்மாதம் 20ஆம் திகதி வரையில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .