எம். றொசாந்த் / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து இடங்களிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, யாழ்ப்பாண மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வேட்பு மனுவைக் கையளித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வாகவும் அபிவிருத்திக்கான தீர்வாகவும் அரசியல் உரிமைகக்கான தீர்வுக்காகவும் இந்த உள்ளூராட்சி தேர்தல் வெற்றி கிடைக்கும், யாழ்.மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் மிகவிரைவில் வேட்பு மனுத் தாக்கல் செய்வோம்.
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் , திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய இடங்களிலும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் போட்டியிடுவோம். மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி எக்காலத்திலும் பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு ஒரு அலகு என்பதே எமது கட்சியின் கொள்கை அதனை நாம் எப்போதும் விட்டுகொடுக்க மாட்டோம். என மேலும் தெரிவித்தார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சின்னம் வீணை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago