2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

விபத்தில் பிள்ளையைப் பறிகொடுத்தப் பெற்றோர்

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் மஹஉஸ்வௌ பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற வீதி விபத்தில் 3 வயது சிறுமி பரிதாபகமாக உயிரிழந்துள்ளார்.

நவகத்தேகம பிரதேசத்திலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி கணவனும், மனைவியும் தமது 3 வயது பெண் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மூவருமே படுகாயமடைந்துள்ள நிலையில், 3 வயது சிறுமி  உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--