2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

விரைவில் தம்மிக்க பாணிக்கு முடிவு

Gavitha   / 2021 ஜனவரி 24 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தடுப்புக்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தம்மிக்க பாணி தொடர்பாக, எதிர்வரும் வாரங்களில் இறுதி முடிவை அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக, ஔடத தயாரிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மருந்து உற்பத்திகளை ஆய்வு செய்ய, அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசியிரி சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இவ்வாறான மருந்துகளை ஊக்குவிப்பது, அரசாங்கத்தின் நோக்கம் என்றும் இவை விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒக்ஸ்போட் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி, முதன்முதலில் இலங்கைக்குக் கிடைக்கும் என்றும் அதன் பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் ரஷ்ய தடுப்பூசியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைககள் இடம்பெற்றுவருவதாகவும் பற்றாக்குறை ஏற்படின், அவற்றை பணம் கொடுத்து வாங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .