2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

'வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்'

Editorial   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தில் வெற்றிப்பெறுவதா அல்லது தோல்வியடைவதாக என்ற தீர்மானத்தை எடுப்பவர்கள் அரசியல்வாதிகளே என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்ததுடன், யுத்தமின்றி அரசியல் இருக்க முடியும் ஆனால் அரசியல் இன்றி யுத்தமொன்று இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

வரலாற்றைப் பார்க்கும்போது உலக அரசியலில் நிலைமை இதுதான் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கு பல உதாரணங்களையும் சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து யுத்தத்தை நிறுத்தியிருந்தால்  நாடு தற்போது மோசமான நிலையை அடைந்திருக்க வாய்ப்பு இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர உரையாற்றிய போது, இடையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறுக்கிட்டு பேசினார்.

இதன்போது, அமைச்சர் சரத் வீரசேகர அரசியல்வாதிகளுக்காக பேசுவதாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .