2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இளைஞன் காயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - ரத்மல்யாய பிரதேசத்தில், இன்று (20) காலை, இடம்பெற்ற விபத்தில், பாலாவி - ஹிஜ்ரத்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்கும் தொழிலை மேற்கொள்ளும் குறித்த இளைஞன், நேற்றுக் காலை, ரதமல்யாய அல்ஹஸனாத் ஜூம்ஆ பள்ளிவாசலுக்குச் செல்லும் குறுக்கு வீதியில் உள்ள பழைய பொருள்களைக் கொள்வனவு செய்யும் நிலையத்துக்கு, பட்டா ரக லொறியில் சென்றுள்ளார்.

இதன்போது, ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது, இயந்திரப் பகுதி செயழிலந்து, பட்டா ரக லொறி ரயில் கடவையிலேயே நின்றுள்ளது.

இதன்போது புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பரிசோதனை ரயில் ஒன்று, அந்த லொறி மீது மோதியுள்ளது. விபத்தில், பகுதியளவில் லொறி சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .