2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வியட்நாம் செல்லும் ரணில்

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்னாமின் ஹெனோய் நகரில் நடைபெறவுள்ள 'ஆசியான்' உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்​கொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் வியட்நாம் செல்லவுள்ளார்.

ஆசிய வலய நாடுகளின் எதிர்கால பொருளாதார போக்குகள், சவால்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறித்த மாநாட்டின் ஆரம்ப நிக​ழ்வாக வியட்நாம் நாட்டின் பிரதமர் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளதுடன், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுன் மற்றும் சீன உப பிரதமர் ஆகியோர் அபிப்ராயங்களை தெரிவிக்கவுள்ளனர்.

இந்த மாநாட்டில்  கலந்துக்கொள்வதற்காக, இலங்கையிலிருந்து அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுட​ஹெட்டி, சென்ட்ரா பெரேரா ஆகியோரும் செல்லவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--