A.Kanagaraj / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தல் பிரசாரத்தில், வேட்பாளர்களின் விருப்பு இல்லகத்தில் அல்லாது, யானை சின்னத்தை மட்டும் பயன்படுத்தி பிரசாரத்தை முன்னெடுக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார் என சிறிகொத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமாக யானைச் சின்னம், கட்சி ஆரம்பிக்கப்பட்ட 1947ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து சகல தேர்தல்களிலும் களமிறக்கப்பட்டுள்ளது.
ஆகையால், மக்களிடத்திலும் வாக்காளர்கள் மத்தியிலும் அச்சின்னத்தை புதிதாக கொண்டுசென்று அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும், கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு, யானை சினத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் அந்தக் கலந்துரையாடலில் ஆகக் கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு தற்போது முகம் கொடுத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் பிரசாரங்கள் யாவும், சமூக வலைத்தளங்கள், ஊடங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்படும். ஆகையால், ஊடக சுதந்திரம் தொடர்பில், அதிகூடிய கவனத்தை செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்தக்கு, ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவருவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஊடங்களுக்கு மட்டுமன்றி, அரச ஊடகங்களுக்கும் வழிகாட்டுதல்களின் தொகுப்பு வழங்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவை வழியுறுத்துவதற்கு ஐ.தே.க தீரமானித்துள்ளதென அறியமுடிகின்றது.
இதேவேளை, இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்தலின் போது, விருப்பு இலக்கமின்றி, கட்சி சின்னத்தை மட்டுமே பிரசாரத்துக்கு உட்படுத்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தேர்தல் வியூகமமைத்து, கட்சியை பலப்படுத்திக்கொண்டது. அவ்வாறான முறைமையையே ஐ.தே.க இம்முறை கையாளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
27 Jan 2026