2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

விரைவில் பொருளாதார நகரங்கள்

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

"இலங்கையில் பொருளாதார நகரங்களை உருவாக்குவதற்காக நாம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உற்பத்தித்துறை, வணிகத்துறை, தொழில்நுட்பத்துறை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே இவை அமையப்பெறவுள்ளன" என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (20) தெரிவித்தார்.

பத்திரங்களின் ஆணைக்குழுக்களுக்கான சர்வதேச அமைப்பின் வளர்ச்சி மற்றும் வளர்ந்துவரும் சந்தைகளுக்கான செயற்குழு மாநாடு கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

"பொருளாதார ரீதியில் நாம் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இலங்கையில் முதலீடு செய்வதற்குரிய சாதகமான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன" என அவர் மேலும் தெரிவித்தார்.

புகைப்படங்கள்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .