Editorial / 2017 ஜூன் 12 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வெள்ளவத்தையில் உள்ள 1,800 கட்டடங்களைத் தகர்ப்போம் என, அமைச்சர் சம்பிக்க கூறியுள்ள ஆணித்தரமான கருத்து, தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் நல்லாட்சியும், பாரிய சவாலுக்கு முகங்கொடுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அச்செயற்பாட்டுக்கு, நாம் அனுமதி வழங்கமாட்டோம்” என, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினருமான என்.குமரகுருபரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வெள்ளவத்தையில், தொடர்மாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட 1,800 பாரிய கட்டடங்களைத் தகர்ப்பதென்பது, சட்டமுறைமைகள், நீதி என்பவற்றுக்கு அப்பாற்பட்ட செயற்பாடாகும். இதற்கு அனுமதி வழங்கிய கொழும்பு மாநகரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மீது, முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட பின், இன்று தகர்த்தெறிவோம் என்று கூறும் வீராவேசப் பேச்சு, முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
சட்டத்துக்கு முரணாக அனுமதி பெற்றிருந்தால், அங்கு ஊழல் இடம்பெற்றிருந்தால் அதனால் இழந்தவர்களும் இந்தக் கட்டடங்களை கட்டியதற்காக பாரிய முதலீட்டை இழக்கப்போவர்களும், தகர்க்கப்படுவதனால் பாரிய இழப்பை எதிர்நோக்கப்போவர்களும், பெருமளவில் தமிழ் பேசும் மக்கள் என்பதே இங்கு முக்கியமான விடயமாகும்.
எனவே, இதனால், நல்லிணக்க அமைச்சு, சவாலை எதிர்நோக்கும் விடயமாகும்.
இந்தக் கட்டடங்கள் தவறானவையாக இருந்தால், இவை கட்டி எழுப்பப்பட முன்பே நகர அபிவிருத்தி அதிகாரசபையும் கொழும்பு மாநகரசபையும் இவற்றுக்கு அனுமதி வழங்காது தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
அதனை விடுத்து, இத்தனை காலத்தின் பின்பு பம்பலப்பிட்டி, வெள்ளவத்தையிலுள்ள ஆயிரக்கணக்கான கட்டடங்களைத் தகர்ப்போம் எனக் கூறுவது, ஏற்றுக்கொள்ளமுடியாத கருத்தாகும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago