Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்-நிதர்ஷன்
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பிரிவான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், மலையக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மலையக பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று யாழ். நகர விடுதியொன்றில் இன்று (22) காலை இடம்பெற்றது.
இதன்போது, வடக்கு - கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வை பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, தாம் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அக்கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனந்தியுடன் பேசியதாகவும், அனந்தியும் தாமும் மலையக மக்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து செயற்படவுள்ளதாக மலையக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும், மலையக மக்களின் பிரச்சினைகளை அனந்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பின்னர், கருத்த வெளியிட்ட அனந்தி, ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கொள்கையளவில் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தில் தலைவராக அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago