2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு 81ஆவது இடம்

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய, 2017ஆம் வருடத்துக்கான தரப்படுத்தலில், ஸ்ரீ லங்கன் விமான சேவை 81ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில், கட்டார் எயார்வேஸ் சேவை முதலாவது இடத்தையும் சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும் ஜப்பான் ஓல் நிபொன் ‘விமான சேவை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

குறித்தத் தரப்படுத்தலில், கடந்த வருடம், இலங்கை 67ஆவது இடத்திலும் 2015ஆம் ஆண்டு 73ஆவது  இடத்திலும் 2013ஆம் ஆண்டு 68ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .