2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு

J.A. George   / 2020 நவம்பர் 24 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, ஹோட்டல் ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலில் பணியாற்றுவதற்காக மூன்று தினங்களுக்கு முன்னர்,
தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனைடுத்து, ஹோட்டலில் கடமையாற்றும், பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சடலத்திடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .