2021 மார்ச் 03, புதன்கிழமை

'கச்சதீவு உடன்படிக்கையை திரும்பப்பெற வேண்டும்'

George   / 2016 ஜூலை 10 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவு உடன்படிக்கையை இலங்கை மீறி வருவதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்  குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஞாயிற்றுக்கிழமை அவர் இதனைக்  கூறியுள்ளார்.

கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் போது, மீனவர்கள் மீன்பிடித்து கொள்ளலாம், வலைகளை காய வைத்து கொள்ளலாம் என்று உடன்படிக்கை உள்ளது. 

ஆனால் இதை இலங்கை மீறி வருகிறது. இதனால் கச்சதீவு உடன்படிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்' என  பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .