2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் புகலிடம் கோரும் சீனப்பிரஜை 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Super User   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

இலங்கையில் புகலிடம் கோரும் சீனப் பிரஜை ஒருவர், முறையான விஸா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் தொடர்ந்தும் எதிர்வரும்  10 ஆம் திகதி திங்கட்கிழமை வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதவான்  லங்கா ஜயரட்ன முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சந்தேக நபர் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளார் எனவும் வெளிவிவகார அமைச்சு, குடிவரவு குடியகல்வு திணைக்களம், அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் ஆகியன செய்துகொண்டுள்ள ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில் புகலிடம் கோருவோருக்கு சான்றிதழ் வழங்கும் ஏற்பாடு உள்ளது எனத் தெரிவித்தார்.

பான் ஜுன் எனும் மேற்படி சீனப்பிரஜை அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தில் பதிவுசெய்துள்ள படியால் அவர் முறையான விஸா இன்றியும் இங்கு தங்கியிருக்க முடியுமென சட்டத்தரணி கே. பூபாலசிங்கம் வாதிட்டார். இது தொடர்பில் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் வழங்கிய கடிதத்தையும் அவர் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதால் சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதிக்க முடியாது என  நீதவான் தெரிவித்ததுடன் சந்தேக நபரை ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--