2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

’’இன்று பீரியட்ஸ்: நாளைக்கு வா’’

Editorial   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரில் பிஜியில் தங்கி பணியாற்றி வரும் 24 வயது நிரம்பிய இளம்பெண்ணை ரூம் புகுந்து இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த பெண் மறுத்ததால் கத்தியால் குத்தியதோடு அவரது ஆடையை கிழித்து ஆபாசமாக செல்போனில் போட்டோ எடுத்து கொண்டதோடு, ஆசைக்கு இணங்கும்படி கூறினார். ஆனால் அந்த பெண் ‛‛இன்னைக்கு பீரியட்ஸ்.. நாளைக்கு வா'' என்று கூறி கத்திக்குத்து காயங்களுடன் தப்பியதோடு பொலிஸில் அளித்த புகாரை தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் ஒயிட்பீல்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிஜி உள்ளது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக தங்குவதற்கு வசதி உள்ளது. இதனால் இருதரப்பினரும் தங்கி உள்ளனர். இந்த பிஜியில் தனியார் நிறுவனத்தில் அனலிஸ்ட்டாக பணியாற்றும் 24 வயது இளம்பெண் தங்கி உள்ளார்.

இந்த பிஜியில் பாபு என்ற சாய்பாபா சன்னூர் என்பவர் தங்கி உள்ளார். இந்த பாபுவுக்கு, இளம்பெண் மீது விருப்பம் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது அந்த இளம்பெண்ணை அடைய வேண்டும் என்று அவர் நினைத்துள்ளார்.

இந்நிலையில்தான் கடந்த 16ம் திகதி அதிகாலை 3 மணிக்கு பாபு திடீரென்று கண்விழித்தார். அவர் அந்த பெண் தங்கியிருக்கும் அறைக்கு சென்று கதவை தட்டினார். தோழி யாராவது கதவை தட்டுவார்கள் என்று அந்த இளம்பெண் கதவை திறந்தார். அப்போது வெளியே நின்ற பாபு மின்னல் வேகத்தில் அறைக்குள் நுழைந்து அவரது வாயை பொத்தினார்.

கதவை உட்புறமாக பூட்டினார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டினார். தனது ஆசைக்கு இணங்கும்படி கூறியுள்ளார். அந்த இளம்பெண் மறுத்துள்ளார். அவரை கீழே தள்ளிய பாபு, ஆசைக்கு இணங்காவிட்டால் கொன்றுவிடுவேன் என்று கத்தியை எடுத்து இளம்பெண்ணின் பின்பக்கத்தில் லேசாக குத்தினார். இதனால் பயந்துபோன பெண், ‛‛இன்று எனக்கு பீரியட்ஸ்.. நாளைக்கு வா'' என்று கூறினார்.

இதையடுத்து பாபு, அந்த பெண் அணிந்திருந்த ஆடைகளை கிழித்து ஆபாசமாக சில போட்டோக்களை செல்போனில் எடுத்து கொண்டார். தொடக்கூடாத இடங்களை தொட்டு அந்த பெண்ணுக்கு முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். அதோடு ரூ.70 ஆயிரம் கேட்டார். அந்த பெண் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால் அவரது செல்போனை பிடுங்கிய பாபு ரூ.14 ஆயிரத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து கொண்டார்.

அதோடு ஆசைக்கு இணங்க வேண்டும். மாறாக இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் இந்த போட்டோக்களை பெற்றோர், நண்பர்கள் என அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இதையடுத்து கத்திக்குத்து காயத்துடன் அந்த இளம்பெண் பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்த இளம்பெண் சார்பில் பொலிஸில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த பொலிஸார், பாபுவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X