2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தின​மும் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் ‘ஆயில் குமார்’

Editorial   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்​நாட​கா​வில் ஆயில் குமார் என்​பவர் தின​மும் ஏழெட்டு லிட்​டர் இன்​ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வரு​வது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்தி உள்​ளது. உடலுக்கு தீங்​கான ஆயிலை குடித்து வரும் இவர் இது​வரை மருத்​து​வ​மனைக்கே சென்​ற​தில்லை என கூறு​வது வியப்​பின் உச்​சிக்கு அழைத்து செல்​கிறது.

அண்​மை​யில் சமூக வலை​தளங்​களில் ஆயில் குமார் குறித்த வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஐயப்ப சுவாமி பக்​தர் ஒரு​வர் வாக​னங்​களுக்கு பயன்​படுத்​தப்​படும் இன்​ஜின் ஆயிலை குடித்​துக்​கொண்டே பேசுகிறார். இந்த வீடியோவை கண்ட‌ லட்​சக்​கணக்​கான பார்​வை​யாளர்​கள் ஆச்​சரி​யத்​தோடு பகிர்ந்து வரு​கின்​றனர்.

அந்த‌ வீடியோ​வில் இடம்​பெற்​றுள்ள 45 வயது மதிக்​கத்​தக்க நபரின் பெயர் குமார். கர்​நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்​தவர். கடந்த 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக தின​மும் ஏழெட்டு லிட்​டர் இன்​ஜின் ஆயிலை குடிப்​ப​தால் மக்​களால் ‘ஆயில் குமார்' என அழைக்​கப்​படு​கிறார். காலை, மதிய உணவை உண்​ணா​மல் மூன்று வேளை​யும் ஆயிலே குடித்து வரு​கிறார். ஆனாலும் இது​வரை உடல்​நிலை பாதிக்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டதே இல்​லை.

வருடந்​தோறும் சபரி மலை ஐயப்​பன் கோயிலுக்கு பாத யாத்​திரை​யாக செல்​வ​தால் தனக்கு எந்த தீங்​கும் நேர​வில்லை என ஊடகங்​களுக்கு அவர் பேட்​டியளித்​துள்​ளார்.

 இதுகுறித்து மருத்​துவ நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘பயன்​படுத்​தப்​பட்ட இன்​ஜின் ஆயில் உடலுக்கு தீங்கு விளைவிக்​கக்​கூடியது. அதி​லுள்ள பாலிசைக்​ளிக் ஹைட்ரோ கார்​பன் புற்​று​நோயை உரு​வாக்​கும். ஆயி​லில் கலக்​கப்​பட்​டுள்ள‌ இரும்​பு, அலுமினி​யம், தாமிரம், ஈயம் போன்ற தனிமங்​கள் நுரை​யீரல், கல்​லீரல், சிறுநீரகம், நரம்பு மண்​டலம் ஆகியற்றை கடுமை​யாக பாதிக்​கும். இதை குடித்​தாலோ, தொடர்ந்து சுவாசித்​தாலோ சுவாச மண்டல பாதிப்​பும் வயிற்று போக்​கும் ஏற்​படும்’’ என தெரிவிக்​கின்​றனர். ஆனால் ஆயில் குமார் எந்த பா​திப்​பும் இல்​லாமல்​ இன்​ஜின்​ ஆயில்​ குடித்​த​வாறே ​பாத ​யாத்​திரை மேற்​கொள்​வது வியப்​பை ஏற்​படுத்​துகிறது.ஆயில் குமார்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X