Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் இன்றைய தினம் செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை நாளில் நடைபெறவுள்ளது.
இன்று சர்வ பித்ரு அமாவாசை, நாளை நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகிறது.
சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி, இன்று இரவு 11.00 மணி முதல் அதிகாலை 3.23 மணி வரை இருக்கும். இரவில் நடப்பதால் இலங்கை, இந்தியாவில் தெரியவதற்கு வாய்ப்பு இல்லை.
மேலும், இன்று ஆரம்பமாகும் சூரிய கிரகணம் தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல், பாலினீசியா, மெலனேசியா, நோர்போக் தீவு, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன் போன்ற நாடுகளில் இருந்து பார்க்கலாம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சில நாடுகளில் சூரியன் 80% வரை மறைந்து, பகல் நேரம் திடீரென இருள் சூழ்ந்திருக்கும்.
சூரிய கிரகணம் நிகழும் இடங்களில் இருந்து பார்ப்பவர்கள் நேரடியாக பார்ப்பதை தவிர்க்கவும்.
விசேஷ கிரகணக் கண்ணாடிகள் (Eclipse Glasses) அல்லது பாதுகாப்பான தொலைநோக்கிகள் மூலம் மாத்திரமே பார்க்க முடியும். இதனை தவறும் பட்சத்தில் கண்களுக்க பாதிப்பு வரலாம்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago