2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நூற்றுக்கு 100 இல் யாரும் தலையிடமுடியாது: அரசாங்கம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அழகன் கனகராஜ்

அரசியலமைப்பின் பிரகாரம் நூற்றுக்கு 100 வீதம் முன்னெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எவரும் தலையிடமுடியாது என்று அரசாங்கம் அறிவித்தது.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார் .

முன்னதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ்.வர்மா உள்ளிட்ட குழுவினருக்கு விஸா நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்மைப்பில் வெளியார் எவரும் தலையிடமுடியாது. அரசியலமைப்பின் அரசியலமைப்பின் பிரகாரம் நூற்றுக்கு 100 வீதம் முன்னெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எவரும் தலையிடமுடியாது. அவைத்தொடர்பில் கேள்வி கேட்பதற்கு இங்கு யாரும் வரமுடியாது.

அந்த விவகாரத்தை கற்றறிந்துக்கொள்ளலாம். அவைத்தொடர்பில் எங்களுக்கு காரணம் கூறமுடியாது. யார் வேண்டுமானாலும் சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வந்து செல்லலாம்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற பிரேரணைக்கு முகம் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

நாட்டின் மீது கொண்டுள்ள பொறாமையின் காரணமாகவே இந்த பிரேரணை கொண்டுவரப்படவிருக்கின்றது. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் எந்தவித குறைபாடுகளும் இல்லை அத்துடன் அமுல்படுத்துவதை பின்னடிக்கவும் இல்லை.

நாட்டின் பின்புலன்கள் பற்றி தெரியாதவர்களே பரிந்துரைகள் யாவும் நாளைக்கே நிறைவேற்றப்படல் வேண்டும் என்று வரையறை செய்கின்றனர். நீண்டகால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டத்தின் கீழ் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றன என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--