2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

முதலாவது ஹஜ் குழு 17ஆம் திகதி பயணம்

Super User   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் இலங்கை ஹாஜிகளின் முதலாவது குழு எதிர்வரும் 17ஆம் திகதி சவுதி அரேபியா நோக்கி பயணமாகவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.நவவி தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இம்முறை இலங்கையர்கள் 5800 பேர் ஹஜ் கடமையினை  நிறைவேற்றுவதற்கான அனுமதியினை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளது.

இம்மாதம் 17ஆம் திகதி  இலங்கையிலிருந்து செல்லவுள்ள முதல் குழுவில் 300 ஹாஜிகள் செல்லவுள்ளதாக அவர் கூறினார்.

முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவரும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா கலந்து கொள்ளவுள்ளதாகவும் பணிப்பாளர் நவவி குறிப்பிட்டார்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .