2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

10 மாவட்டங்களில் தொற்றாளர்கள்

S. Shivany   / 2020 நவம்பர் 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் 10 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று(24) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக பதிவான 459 பேரில் 259 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் 78 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 23 பேரும், கண்டி மாவட்டத்தில் 16 பேரும், காலி, நுவரெலியா மாவட்டங்களில் தலா 4 பேரும், யாழ்ப்பாணம், மாத்தறை, இரத்தினபுரி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸார் 19 பேரும் பொலிஸ் அதிரடிப்படையைச் சேர்ந்த 17 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .