Editorial / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகள் முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஒத்துழைப்பு நல்குவோமெனத் தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த அரசமைப்புத் திருத்தத்திலேயே அதை உட்புகுத்தினால் ஜே.வி.வி முழுமையாக ஆதரவளிக்கும் என்றார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், 13,19ஆவது திருத்தங்களைப் போலவே 20ஆவதும் ஒரு திருத்தமாகும் என்றார்.
“திருத்தங்களின் ஊடாக, அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். திருத்தவேண்டிய ஆவணங்கள், புதிய கடிதங்களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். அவ்வாறான ஆவணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்” என்றார்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தமானது, இனத்தையோ மதத்தையோ பொருட்படுத்தாமல், அனைத்துக் குடிமக்களுக்கும் சம முன்னுரிமையை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், எந்தவொரு குடிமகனும் இன்னொருவருக்கு இரண்டாம் நிலையென உணரக்கூடாது என்ற பிரச்சினைக்கு 20ஆவது திருத்தம் தீர்வு கண்டால் ஜே.வி.பி ஆதரவை வழங்கும் என்றார்.
16 minute ago
39 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
39 minute ago
3 hours ago
4 hours ago