2020 நவம்பர் 28, சனிக்கிழமை

‘13 ஆம் திருத்தம் தொடர்பிலான நிலைப்பாட்டில் மாற்றமில்லை’

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்குதல், மாகாண சபை முறைமையை ஒழித்துக்கட்டல் போன்ற விடயங்கள் தொடர்பாக தான் கொண்டடிருந்த நிலைப்பாட்டில் சிறிதும் மாற்றம் இல்லையெனத் தெரிவித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என்றார்.

“மேற்ப​டி விவகாரத்தில் தான் எடுத்திக்கும் நிலைப்பாட்டிலிருந்து மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன. அவை தன்மீது சேறு பூசுவதற்கான முயற்சிகள்” ஆகும் என்றார்.

அதனால் மாகாண சபைகளை ஒழித்தல், அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்கவேண்டும் என்பது தொடர்பில் தான் ​கொண்டிருந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை. அதனை உறுதியாக மீண்டும் கூறுகிறேன் என, ஊடகங்களுக்கு நேற்று (20) அனுப்பியிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆகையால், தனது நிலைபாடு தொடர்பில் வெளியாகும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பி ஏமாற்ற வேண்டாமெனவும் அவ்வறிக்கையின் ஊடாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--