2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

14 வரையிலும் சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்

Editorial   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றிலிருந்து இலங்கைக்கு நேராகவே சூரியன் உச்சம் கொடுக்கிறது எனத் தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், எதிர்வரும் 14 ஆம் திகதி வரையிலும் உச்சம் கொடுக்குமென அறிவித்துள்ளது.

​அதனால், கொழும்பு, மல்வான, கொஸ்கம, சீதாவக்க, மடல்தெனிய, ரொஸல்ல, தலவாக்கலை, சீதாஎலிய, எட்டாம்பிட்டிய, பசறை, பொரலந்த மற்றும் பல்லடி கலப்புவ ஆகிய இடங்களிலேயே வெப்பமான காலநிலை அதிகரித்து இருக்கும்

மேலே குறிப்பிட்ட இடங்களில் எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் நண்பகல் 12.30க்கு சூரியன் உச்சம் கொடுக்குமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில், நாட்டின் மேற்​கு, சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பகல் வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X