Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிலவும் வீடுகளுக்கான நெருக்கடி நிலைக்கு தீர்வாக இவ்வாறு தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியினர் ஒரே நிலைப்பாட்டிலுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தினூடாக பிரதமருக்கான அதிகாரங்கள் குறையாது எனவும் அதிகாரம் காணப்படுகிறதா?, இல்லையா? என்பது பிரதமரின் கையிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
20 Jan 2026