2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் உதவி தேவை: அமைச்சர் டியூ

Super User   / 2010 ஜூலை 10 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வுக் காண்பதில் இந்தியாவின் உதவியும் ஆலோசனையும் தேவை என அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான அமைச்சர் டியூ குணசேகர, இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.  கடந்த 30 வருடங்களில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்தக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமை இதுவே முதல் தடவையாகும்.

இதேவேளை, நலன்புரி நிலையங்களிலிருந்து கைது செய்யப்பட்ட தமிழர்களான பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் அமைச்சர் டியூ குணசேகரவின் தலையீட்டினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .