2020 நவம்பர் 28, சனிக்கிழமை

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக நிதி சேகரிப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                     alt

 

               (றிப்தி அலி)

யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதற்காக  "மீண்டும் யாழ்ப்பாணம் செல்வோம்" எனும் தொனிப்பொருளில் நிதி சேகரிக்கும் நடவடிக்கையொன்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிதி சேகரிப்பு நடவடிக்கையினை எம்.எப்.சீ.டி அரசசார்பற்ற  நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 550,000 ரூபா பெறுமதியான 100 வீடுகள் கட்டுதல், சேதமடைந்துள்ள 100 வீடுகளை புனர்நிர்மானம் செய்து கொடுத்தல், வாழ்வாதார  நடவடிக்கைகளுக்கு உதவுதல், தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து முக்கியமான கற்கை நெறிகளை பயிற்றுவித்தல், சிறு முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒஸ்மானியா கல்லூரியை புனர்நிர்மாணம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, "யாழ்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களின் மீள்குடியோற்றத்திற்காக அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை மீளக்குடியேற்றுவதற்காக அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தங்களால் இயலுமானவற்றை மேற்கொள்வதன் மூலம் மிக விரைவில் அங்கு மக்களை மீளக்குடியமர்த்த முடியும்.

அரசு மீளக்குடியேற்றும் வரை காத்திருந்தால் இன்னும் எத்தனை வருடங்கள் செல்லும் என்றே தெரியாது" என றிஸ்வி முப்தி மேலும் குறிப்பிட்டார்.

"இதனை எம்.எப்.சீ.டி நிறுவனம் மாத்திரம் தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. இயலுமான அனைத்து நிறுவனங்களும் இந்நிறுவனத்துடன் இணைந்து செயற்பட முடியும். அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமைபட்டு இந்த பணியை மேற்கொள்வதன்
மூலம் விரைவாக மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அனைவரும் ஒற்றுமைப்பட்டு மேற்கொள்வதனால், அரசிடம் இருந்து உதவிகளை பெறுவதில்லை என்று அர்த்தமல்ல. அரசினால் வழங்கப்படும் உதவிகளையும் தாம் பெற வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் எம்.எப்.சீ.டி. நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மசூர் தமது அமைப்பு யாழ். மக்களுக்காக மேற்கொள்ளவுள்ள செயற்படுகள் தொடர்பில் விளக்கினார்.

இச்செயற்திட்டத்திற்கு நிதி வழங்க விரும்புபவர்கள் எம்.எப்.சீ.டி. இலக்கம் 1/A ஹில் காஸ்டல், பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு 12 எனும் முகவரியோடு அல்லது எம்.எப்.சீ.டி. நிறுவனத்தின் பெயரில் ஹல்ஸ்ரொப்பில் உள்ள இலங்கை வங்கி  கிளையின் 000920243 கணக்கிலக்கத்திலும் வைப்பிடலாம். (படப்பிடிப்பு: றிப்தி அலி)

alt

alt

alt


  Comments - 0

 • asanar jazeell Friday, 27 August 2010 03:11 PM

  அல்ஹம்துலில்லாஹ்... சிறந்த முயற்சி..

  Reply : 0       0

  sahib Tuesday, 24 August 2010 05:19 AM

  வெளி நாடுகளில் உள்ள சகோதரர்களும் இதில் கலந்து கொண்டு, தங்களால் முடியுமானதை செய்ய முன் வரலாம். அவர்கள் எவ்வாறு , யாரை தொடர்பு கொண்டு பணம் அல்லது தான் விரும்பியதை செய்வதற்கான விபரத்தைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  Reply : 0       0

  Pottuvilan Wednesday, 25 August 2010 05:29 AM

  காலம் கடந்த ஞானம் ,முயற்சிப்போம் .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .