2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இலங்கை, இந்தியாவிற்கு இடையிலான பாதுகாப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் உயர்மட்டப் பேச்சுவார்த்தையொன்று நேற்று வியாழக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது.

இலங்கை உயர்மட்டக் குழுவினரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கும்  இந்திய உயர்மட்டக் குழுவினரான வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோருக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர, மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும்  இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பசில் ராஜபக்ஷ, இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன் பின்னர் இந்திய அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கோட்டாபய ராஜபக்ஷ, லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய அதிகாரிகளுடன் பசில் ராஜபக்ஷவே பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவித்திருந்த லலித் வீரதுங்க, கடந்த புதன்கிழமை இரவு கோட்டாபய ராஜபக்ஷவும் தானும் திடீரென புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் கூறினார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--