Super User / 2010 செப்டெம்பர் 04 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
ஸ்ரீலங்கா ரெலிகொம் (எஸ்.எல்.ரி.) நிறுவனத்தின் கணினிகளில் ஏற்பட்ட வைரஸ் தாக்கத்தினால் அந்நிறுவனத்திற்கூடாக இயக்கப்படும் பல இணையத்தளங்களை வெளிநாட்டிலிருந்தும், சில நேரங்களில் இலங்கையிலிருந்தும் பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டது. 
தமிழ் மிரர் மற்றும் அதன் சகோதர இணையத்தளமான டெய்லி மிரர் ஆகியனவும் இப்பாதிக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
இத்தளங்களை பார்வையிட முடியாதிருப்பதாக வெளிநாட்டிலுள்ள பலர் புகாரிட்டிருந்தனர். அதேவேளை, இலங்கையிலும் சில தினங்களாக வாசகர்கள் இத்தகைய சிக்கலுக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கடந்த சில தினங்களாக இணைய வேகம் குறைவடைந்திருப்பதாக கொழும்பிலுள்ள இணைய பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
	இது தொடர்பாக எஸ்.எல்.ரி. அதிகாரியொருவரிடம் கேட்டபோது வைரஸ் தாக்கத்தினால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளாகவும் விரைவில் இவ்விடயத்திற்குத் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
	 
57 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago