Super User / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சோகா ஜனாதிபதியிடம் மன்னிப்பளிக்குமாறு கோரமாட்டார் என ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனையை ஜனாதிபதி அங்கீகரத்தையடுத்து சரத் பொன்கோ நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் பொன்சேகா கோரினால் ஜனாதிபதி இத்தீர்ப்பை மீள் பரிசீலணை செய்வார் என செய்தி வெளியாகியமை தொடர்பாக கேட்டபோதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.
பொன்சேகா அப்பாவி எனவும் அவருக்கு எதிரான நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே எனவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பொன்சேகாவின் விடுதலைக்கு நாடு முழுவதும் பொதுமக்களின் பொதுமக்களின் ஆதரவு திரட்டப்படும் எனவும் சிவில் நீதிமன்றம் மூலம் சரத் பொன்கேகா விடுதலை செய்யப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார். Pix by :- Pradeep pathirana
.jpg)
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Mar 2026
13 Mar 2026