2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சோனியா – கருணாநிதி சந்திப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையிலுள்ள முகாம்களில் தமிழ் மக்கள் படும் அவலங்களை முடிவுக்கு கொண்டுவருதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியிடம் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரிக்கு மற்றும் திருச்சிராப்பள்ளிக்குச்  செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்திற்குச் சென்ற சோனியா காந்தியை சந்தித்து கையளித்த மகஜர் ஒன்றிலேயே கருணாநிதி இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான செயன்முறைகளை இலங்கை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டுமெனவும் கருணாநிதி கூறியுள்ளார்.

"இலங்கைத் தமிழ் மக்கள் கடந்த 18 மாதகாலமாக முகாம்களில் துன்பப்படும் நிலையில் அனைத்து மக்களினதும் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உறுதியான அரசியல் கடப்பாடு அவசியம்.

எனவே முகாம்களிலுள்ள மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் அவர்களின் துயரங்களை முடிவுக்குகொண்டு வருவதற்கும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென இந்தியா அரசாங்கத்தைக் கோருமாறு உங்களை கோருகிறேன்'" என சோனியா காந்தியிடம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது கருணாநிதியுடன் தமிழக பிரதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
 


  Comments - 0

 • koneswaran saro Sunday, 10 October 2010 01:21 AM

  கலைஞர் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிடுகிறார் என்றால் விரைவில் தமிழகத்தில் தேர்தல் என்று அர்த்தம்.

  Reply : 0       0

  Alfred Alfred Sunday, 10 October 2010 02:26 AM

  ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.

  Reply : 0       0

  xlntgson Sunday, 10 October 2010 07:57 PM

  aadu nanaigiradhaa onaai alugiradhaa? aadu yaar onai yaar? undaveettukku irandagam seigiravan aadaa onaiyaa?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .