2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஆண் தாதியர்களை பிரசவ அறைக்குள் அனுமதிக்கத்தேவையில்லை: மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனாநாயக்க)

வைத்தியசாலைகளின்  பிரசவ  அறைகளில் ஆண் தாதியர்களை அனுமதிப்பதற்கான அவசியம் இல்லையென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. பெண்கள் சங்கடத்திற்குள்ளாவர் என்பதே இதற்குக் காரணம். அத்துடன் அவர்களுக்கு இதில் தீர்மானம் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தாதி உத்தியோகஸ்தர்களில் 95 சதவீதமானோர் பெண்கள். பெண் நோயாளிகளை ஆண் தாதியர் அணுகலாமா என்பது கேள்விக்குரியது. இவ்விடயத்தில் பெண் நோயாளிகளே தீர்மானம் மேற்கொள்ள இயலுமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரசவ அறைகளில் ஆண் தாதியர்களையும் அனுமதிக்குமாறு கோரி குருநாகலில் தாதியர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இந்த கோரிக்கைக்கு எதிராக குருநாகல் வைத்தியசாலை மருத்துவர்களும் சிற்றூழியர்களும் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடுசெய்துள்ளதாகவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0

 • G.Pramanathan Sunday, 17 October 2010 04:12 AM

  என்னவொரு ஆசை ஆண்தாதிகளுக்கு!

  Reply : 0       0

  xlntgson Sunday, 17 October 2010 09:05 PM

  பிரமநாதன், ஆண்தாதியர் வெள்ளைக்காரர்கள் காலத்திலே இருந்து பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். பெண்தாதிகளால் மேசைகளை நகற்ற, கனமான கருவிகளை இங்கும் அங்கும் தூக்கி வைக்க இயலாது. சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் ஆண்களே. ஆனால் நம் நாட்டில் மகப்பேற்று ஆண்தாதிகள் மிகக்குறைவு. நோயாளியின் சம்மதம் கேட்டுக்கொண்டு இருப்பதற்குள் ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடும். பயணித்துக்கொண்டிருக்கும் போதே முச்சக்கரவண்டியில் ஒரு பெண் பிரசவித்து இருக்கிறார். அவருக்கு நினைவு?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .