2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

எல்.ரி.ரி.ஈ.யுடனான தொடர்புகள் குறித்து தாவூத் இப்ராஹிம் குழு உறுப்பினரிடம் விசாரணை

Super User   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு ஆயுத விநியோகம் செய்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்புகள் குறித்து இந்திய பாதாள உலகக்குழுத் தலைவரான தாவூத் இப்ராஹிமின் முக்கிய உதவியாளர் ஒருவரிடம் மும்பை பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிர்ஸா மொஹிடீன் பாய் எனும் மேற்படி நபர் கடந்தவருடம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் தாவூத் இப்பராஹிம் குழுவுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுத விநியோக தொடர்புகள் குறித்து மும்பை பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்துவதாக மும்பை பொலிஸின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ராகேஸ் மரியா இந்தியாவின் 'மிட் டே' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். எனினும் மேலதிக விபரங்களை வெளியிடுவதற்கு அவர் மறுத்துள்ளார்

இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்த மொஹிடீன் பெய்க், 08.05.2009 ஆம் திகதி கொழும்பில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக மிட் டே பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதன்பின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பெய்க் கடந்த வாரம் மும்பை பயங்கரவாத ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X