Super User / 2011 ஜனவரி 21 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ரி.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் புதிய கூட்டணி போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெறும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இந்த புதிய கூட்டணி போட்டியிடும். இக்கூட்டணியின் வேட்பு மனு அடுத்த வாரமளவில் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .