Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம், கவிசுகி, சுபுன் டயஸ்)
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக புறப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகளிடம் கேட்பதற்காக அவர்களைத் தொடர்பு கொண்ட போது அது பயனளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, வல்வெட்டித்துறை நோக்கிப் பயணிக்கும் பயணிகள் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களைச் சோதனையிடும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பயணிகளிடம் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவா செல்கிறீர்கள் என்றும் அவ்வாறு செல்வதாயின் அதற்கு அனுமதி வழங்க முடியாது, திரும்பிச் செல்லுங்கள் என்றும் கூறி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மேலும் கூறினார்.
இதேவேளை, பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளுக்கோ, அதில் கலந்துகொள்பவர்கள் மீதோ பாதுகாப்பு தரப்பினர் எவ்வித இடையூறுகளையும் விளைவிக்கவில்லை எனவும் இறுதிக் கிரியைகளில் கலந்துக்கொள்ள செல்பவர்களை படையினர் தடுக்கவில்லை எனவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.
பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடியிடம் இது தொடர்பாக கேட்டபோது, பல்லைக்கழக மாணவர்கள் தடுக்கப்பட்டதாக தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறினார்.
அதேவேளை பார்வதி அம்மாளின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளச் செல்பவர்களை தடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025