2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் டலஸ் தமிழில் உரை; தமிழ் தெரியாததால் பஷில் கவலை

Super User   / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் யாழ் கிளை, மற்றும் யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதிய கட்டிடம் ஆகியவற்றின் திறப்புவிழாவின் பின் நடைபெற்ற கூட்டத்தில் சிங்கள மொழியில் உரையாற்றிய அவர் தமிழில் பேசும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டங்களில் உரையாற்றும்போது தமிழ் மொழியிலும் அன்புடன் பேசி வருகிறார். ஐ.நா.விலும் அவர் தமிழில் உரையாற்றியுள்ளார். ஆனால், எமது சகோதர மொழியில் நன்றாக பேசும் அளவுக்கு நான் அதிஷ்டம் செய்யவில்லை. எனினும் என்னால் முடிந்தளவு ஓரிரு வார்த்தைகள் தமிழில் பேச விரும்புகிறேன்' என்று அவர் கூறினார்.

அவர் தமிழில் உரையாற்றுகையில்,

"சந்தேகம், அச்சம், காரணமாக அர்த்தமற்ற பிரிவினை தோன்றியது. எதிர்காலத்தில் எமது சிங்கள, தமிழ் சந்ததியினர் இத்தகைய துரதிஷ்டசாலிகளாக இருக்க மாட்டார்கள்.

தமிழ் மக்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தமை எனக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். இன்றைய 2011 பெப்;25 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தினால் யாழ். பல்லைக்கழகம் திறந்துவைக்கப்பட்டது. அதற்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்திற்கு கல்வித்துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் இதுவாகும். எமது பிள்ளைகளுக்கு ஒளிமயான எதிர்காலத்தை ஏற்படுத்த இந்நிறுவனங்கள் வழிவகுக்கும்" என்றார்.

அதேவேளை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை தொடர்ந்து உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தன்னால் தமிழில் உரையாற்ற முடியாதமை குறித்து கவலை தெரிவித்தார்.

'என்னால் எழுதி வைத்துக்கொண்டுகூட தமிழில் உரையாற்றிய முடியாதமை குறித்து வேதனையடைகிறேன். எனினும் இங்குள்ள மக்களின் மனங்களில் வாழ்கிறோம் என்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.

 


  Comments - 0

 • sirajmohamed Saturday, 26 February 2011 04:53 PM

  யாரும் பேசலாம் யாரும் அழிக்கலாம்.

  Reply : 0       0

  xlntgson Saturday, 26 February 2011 09:23 PM

  பஷில் என்பதே பிழை பெசில் என்பதுதான் சரியானது,
  தமிழ் மூலம் சிங்களம் சிங்கள மூலம் தமிழ் படிப்பது கடினம் இல்லை.
  சில அடிப்படைகளை விளங்கிக்கொள்வதோடும் அதில் ஆர்வமாக இருப்பதும் எங்கே பிழையாக பேசி அவமானப்படுவோமோ என்ற கவலையை விட்டு சக மொழியின் மீதான வெறுப்பை கைவிட்டால் இலகுவாக படிக்க இயலும்.
  நேரமில்லை என்று சொன்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஒருவேளை தொலைபேசியில் நண்பர்களோடு கதைத்து பார்க்கலாம்.
  டலஸ். பெசில் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வைத்துக்கொண்டு பேசலாம்.
  முற்கூட்டியே எனது வாழ்த்துகள்!

  Reply : 0       0

  Salamdeen Sunday, 27 February 2011 12:42 AM

  இப்பொழுது தொலைபேசியில் அழைத்து நாங்கள் எமக்கு தேவயான வசனங்களை மொழி பெயர்க்கும் வாய்ப்பு உள்ளது. அனால் ஒரு சிக்கல் என்னவென்றால் நாம் அழைத்து தான் மொழி பெயர்ப்பை பெற வேண்டியுள்ளது. எமக்கு தேவையான வசனங்களை அல்லது சொற்களை இன்டர்நெட் மூலம் மொழிபெயர்க்க முடியுமான ஒரு அமைப்பை ஏற்படுத்த உங்கள் முடியுமா எனக்கு ஈமெயில் மூலம் பதில் தருவீர்களா நன்றி.wanakkam

  Reply : 0       0

  xlntgson Sunday, 27 February 2011 08:58 PM

  Salamdeen, என்னதான் இருந்தாலும் ஒருவர் வாயையும் அசைவுகளையும் நளினங்களையும் பார்த்துப் படிப்பது போல வராது, என்ன? என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் என்னாலானதை செய்கின்றேன்! xlntgson@gmail.com

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X