2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு முல்லைத்தீவுடன் இணைப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

அநுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவை அரசாங்கம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் இணைத்துள்ளதென அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

கிராம அலுவலகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் திட்டத்தின் கீழே இது செய்யப்பட்டதாக அவர்கள் கூறினர்.

வெலிஓயா பகுதியில் 9000 சிங்கள மக்கள் வாழ்கின்றனர். யுத்த காலத்தில் இவர்களால் முல்லைத்தீவுக்கு போகமுடியாத நிலை காணப்பட்டதில் இது அநுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

பிரதேச செயலாளர் பிரிவுகள், கிராம அலுவலகர் பிரிவுகளின் எல்லை மீள்நிர்ணயத்துக்காக நியமிக்கப்பட்ட குழு அதன் சிபாரிசை இந்த வருட இறுதிக்குள் சமர்ப்பிக்குமென பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் கூறினார்.

புதிய மாவட்டமொன்றை உருவாக்கும் சாத்தியமுள்ளதாவெனக் கேட்டபோது, தற்போது அதற்கு சாத்தியமில்லையென அவர் கூறினார்.

இதேவேளை, வவுனியாவில் இரண்டு புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உருவாக்குமாறு தான் கேட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயத்துக்கு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி தன்னைச் சந்திக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் கூறினார். புதிய பிரதேச செயலாளர் பிரிவுகள் தேவையென சில அரசியல்வாதிகள் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார். 


  Comments - 0

 • neethan Tuesday, 18 October 2011 08:24 PM

  இன்னுமொரு பெரும்பான்மையின பிரதேச செயலாளர் பிரிவு எண்ணிக்கையில் அதிகரிக்கிறது? பேரினவாத விரிவாக்கத்தின் கரம் நீளுகிறது என்பது வாஸ்தவம்.

  Reply : 0       0

  sakeena Tuesday, 18 October 2011 09:14 PM

  நீதன் நீங்கள் நீதியாக பேசவேண்டும். இது இனவாதம் அல்ல. யுத்த காலத்தில் புல்மோட்டை கூட அனுராதபுரத்துடன் தான் இணைக்கப்பட்டிருந்தது. மற்றது அனைத்து இன மக்களும் இணைந்திருந்தாலே இனவாதம் ஓடி ஒழித்து விடும்.

  Reply : 0       0

  ruban Wednesday, 19 October 2011 02:45 AM

  நிழலின் அருமை வெய்யிலில் தெரிகிறது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .