2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

'விநோதத்திற்காக' வைத்தியரான மேசன் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணிப்பெண்கள், புதிதாக திருமணம் முடித்த பெண்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களை பரிசோதிக்கும் மகப்பேற்று,  நரம்பியல் வைத்தியரென தன்னை அடையாளபடுத்தி பெண்களிடம் சேஷ்ட்டை விட்ட மேசன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கராபிட்டிய வைத்தியசாலையிலிருந்து வருகின்ற விசேட நிபுணத்துவம் பெற்ற வைத்தியரென கூறிக்கொண்டே குறித்த சந்தேக நபர், கர்பிணிப் பெண்களின்; அங்கங்களை தொட்டு பரிசோதித்துள்ளார்.

கிராமங்களுக்கு சென்று வீடுவீடாக பரிசோதனைகளை மேற்கொண்ட இந்த வைத்தியர் தொடர்பில் சந்தேகங்கொண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைதானவர் மொறவக பிரதேசத்தைச் சேர்ந்த சாதாரண மேசன் என்றும் பெண்களின் அங்கங்களை தொடுவதை அவர் விநோத செயற்பாடாக மேற்கொண்டு வந்ததாகவும்  தான் ஒரு வைத்தியரென நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆதாரங்களும் அவரிடம் இல்லையென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சந்தேக நபரிடமிருந்து கர்ப்பம் தரிக்கமால் இருப்பதற்கான உறைகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .