2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

பிரதேசசபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல்

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியவெவ பிரதேசசபை தலைவரின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரதேச சபைத்தலைவர் சுஜித் முத்துகுமாரவின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அவரின் விஹாரகல வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் இன்று காலை வருகைதந்தோரே வீட்டின் கண்ணாடி யன்னல்களை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிசென்றுள்ளனர்.

இனந்தெரியாதோர் தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவேளை தன்னுடைய குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் எனினும் தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .