2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

"போராட்டத்தின் ஆரம்பம்" இன்று உதயம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 10 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகவிருக்கின்றது.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை  தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணையவுள்ளன.

 இது தொடர்பிலான உடன்படிக்கையில் குறிப்பிட்ட 12 கட்சிகளின் தலைவர்களும் இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, நவ சிஹல உறுமய, மவ்பிம ஜனதா கட்சி, ரு{ஹனு ஜனதா கட்சி, எக்சத் ஜனதா பெரமுன, முஸ்லிம் தமிழ் முன்னணி உட்பட 12 கட்சிகளே இதில் கைச்சாத்திடவுள்ளன.

ஆகிய பத்து கட்சிகளும் சுதந்திரத்திற்கான மேடை என்ற சிவிலமைப்பும் ஒரு ஒழுங்கமைப்பிற்குள்  வரும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை 2 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதன்படி ரணில் விக்கிரமசிங்க, ஆர். சம்பந்தன், மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன, சரத் மனமேந்திர, ஹேமகுமார நாணயக்கார, அருணா சொய்சா, சிறிமா சிறி பெரேரா, அசாத்  சாலி மற்றும் சட்டத்தரணி  சுதர்சன குணவர்த்தன ஆகியோர் ஒரு பொதுவான உடன்பாட்டில் கையெழுத்திட  உள்ளார்கள்.

  Comments - 0

 • meenavan Monday, 11 February 2013 03:42 AM

  என்னதான் நீங்கள் கூட்டு அமைத்து ஆர்ப்பாட்டம் செய்தாலும் அரசு புலி, கிளியை பேரினவாதிகள் மத்தியில் உருவாக்கி விமலவீரரையும் சிஹல உறுமயவினரையும் அதற்கு ஏற்ப நர்த்தனம் ஆடவைக்கும். இறுதியில் போராட்டம் பிசு பிசு தான்......

  Reply : 0       0

  Haniff Monday, 11 February 2013 05:09 AM

  எதிர்க்கட்சித் தலைவரை எந்தளவிற்கு நம்பலாம் என்பது தான் சந்தேகமா இருக்கு...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--