2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

தனுனவின் பாட்டி விடுதலை

Kanagaraj   / 2013 ஜூலை 24 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் பாட்டி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தனுனவின் பாட்டியான 85 வயதான விமலா திலகரத்னவே கோட்டை நீதவான் திலின கமகேவினால் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

வழக்கை தொடர்வதற்கு சட்டரீதியாக இடமின்மையால் வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.

தனுனவிற்கு 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி தங்குவதற்கு இடமளித்தமை தொடர்பில் சாட்சி இல்லை என்பதனால் சந்தேகநபரான விமலா திலகரத்ன குற்றவாளியில்லை என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தனுன திலகரத்தனவிற்கு பாதுகாப்பு வழங்கினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவரது பாட்டி  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனுனவின் பாட்டியான 85 வயதான விமலா திலகரத்னவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் கடந்த 10 ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தனுன திலகரத்னவின் பாட்டியை விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதியன்று தீர்மானிக்கப்படும் என்று நீதிமன்றம் அன்று அறிவித்திருந்தது.

இந்த வழக்கின் பிரதிவாதியான விமலா திலகரத்னவின்  வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளாமல் அவரை விடுவிக்குமாறு அவர் சார்பில் ஆஜராக சட்டத்தரணி நீதிமன்றத்தில் அன்று கோரிநின்றார்.

இதனையடுத்தே,  இதுதொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்று அறிவித்த நீதவான் இன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார். வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவரை நீதவான் விடுதலை செய்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--