2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக நடவடிக்கை

Gavitha   / 2015 ஜூலை 30 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கடந்த நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆணைக்குழு ஆணையாளர்கள் மீது விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்றை அடுத்து, அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு வருடங்களில், 1,900 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த ராஜபக்ஷ, அவற்றில் சில முறைப்பாடுகள் மாத்திரமே விசாரிக்கப்பட்டுள்ளன என்றார்.

இலஞ்சத்தோடும் ஊழலோடும் தொழிற்படுகின்ற கட்டமைப்பில், மக்களின் நம்பிக்கையை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் என அமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .