2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியசாலை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தக்கூடிய வசதிகள் உள்ளனவா என்று ஆராயுமாறு நெல் சந்தைப்படுத்தல் சபையின் தென்பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.எஸ்.திலகரத்னவுக்கு சபையின் தலைவர் எம்.டீ,திசாநாயக்க, கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் அனைத்து களஞ்சியசாலைகளும் தற்போது நிரம்பியுள்ளன. இந்நிலையில்,  சிறுபோக அறுவடையில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்யும் பணிகள், எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லைக் களஞ்சியப்படுத்த மேற்படி களஞ்சியசாலைகள் தேவை என்பதாலேயே மத்தல விமான நிலையம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடிதத்தின் பிரதியொன்று, மத்தல விமான நிலைய நிர்வாகத்திடமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மத்தல விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர், இந்த நெல் களஞ்சியப்படுத்தல் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே, மத்தல விமான ஓடுதளத்தில் மிளகு மற்றும் மிளகாய் என்பன காயவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .