2020 மார்ச் 30, திங்கட்கிழமை

‘225 பேரில் தனக்கே அதிக நெருக்கடி’

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்களை வேறுவேறாக வகைப்படுத்தி, மூளைச்சலவை செய்யும் தந்திரோபாய வேலைத்திட்டத்தை, பேரினவாத தரகர்கள் மேற்கொண்டு வருவதாகவும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைப்பதே  இவர்களின் உள்ளார்ந்த திட்டமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“புத்தளம் மாவட்டத்தின் தம்பபண்ணி, கொய்யாவாடி மற்றும் ஆலங்குடா பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு மக்களுடன், நேற்று  (23) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், “புத்திஜீவிகள்,  உலமாக்கள், கற்றவர்கள், தனவந்தர்கள், வர்த்தகர்கள் என  வகைப்படுத்தி, அவர்களுடன் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, மிகவும் கச்சிதமாக இந்த நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகின்றனர் என்றார்.

 அத்துடன், எமது சொந்த மண்ணில், மக்களை மீளக்குடியேற்றம் செய்தமையும் அவர்களின் இன்ப துன்பங்களில் ஒத்தாசையாக இருந்தமையுமே, இனவாதிகள் எம்மீது வீண்பழி சுமத்துவதற்கு காரணமாயிற்று எனத் தெரிவித்த ரிஷாட் எம்.பி,  நாடளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 எம்பிக்களில், நெருக்கடியையும் கஷ்டத்தையும் அதிகம் சந்திக்கும் ஒருவனாக நான் இருக்கின்றேன் என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .