Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தை கடந்த மே மாதம் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோவேஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரோமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கே இந்த விசேட விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025