2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

5,000 ரூபாய் கொடுப்பனவு நாளை வரை வழங்கப்படும்

Editorial   / 2020 ஏப்ரல் 21 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவை குடும்ப பட்டியலில் உள்ள ஏனைய குடும்பங்களுக்கும் வழங்க, அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்கள், ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவோர் (ஏப்ரல் மாத வேதனம் கிடைக்காதவர்கள்), 5,000 ரூபாய்க்கும் குறைந்த வருமானம் பெறுவோர், 5,000 ரூபாய்க்கு குறைந்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோர், இதுவரை 5,000 ரூபாய் கொடுப்பனவு  கிடைக்கப்பெறாதவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. 

கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் கிராமிய குழுக்களிடம் மேன்முறையீடு செய்தால், குறித்த கொடுப்பனவை நாளை (22) தினத்துக்குள் வழங்குமாறு, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X