Editorial / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நீதியமைச்சின் புள்ளிவிவரத் தகவல்களின் பிரகாரம், 7 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள், தீர்த்துவைக்கப்படாமல், இலங்கையில் உள்ளன” என்று, கொழும்பு பல்கலை க்கழகத்தின் சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையா ளர் பேராசிரியர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.
எனினும், தற்போதைய அரசியல் மேடைகளில், விசேட நீதிமன்றம் நிறுவப்பட்டு, கடந்த ஆட்சியின் போது, அரச வளங்களை கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற கருத்துகள் மேலோங்கியுள்ளன.
கொழும்பு மேல் நீதிமன்றங்கள் ஒவ்வொன்றில் மட்டும், தீர்த்துவைக்கப்படாமல், ஆகக்குறைந்தது 10 வழக்குகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான வழக்குகள் சாதாரண வழக்குகளாகும். அவற்றை, ஏனைய நீதிமன்றங்களுக்கு பிரித்துக்கொடுத்து, தீர்த்துவைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில், நீதிமன்றங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
இதேவேளை, அடிப்படைய உரிமை மனுக்களை, மாகாண உயர்நீதிமன்றங்களும் விசாரணைக்கு உட்படுத்தும் வகையில், ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
13 minute ago
36 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
3 hours ago
4 hours ago