Editorial / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இடம்பெற்ற இஸ்லாமிய இராச்சியம் எனும் பெயரிலான ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள், செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கான விசேட யோசனைகளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார்.
அந்த வகையில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதனோடு இணைந்த அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும், நிகாப் மற்றும் ஃபர்தாவைத் தடை செய்ய வேண்டும், ஸரியா பல்கலைக்கழகம், மத்ரசா பாடசாலைகள் அனைத்தும் அரச கொள்கைகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும், இஸ்லாமிய பயங்கரவாதச் சிந்தனைகளில் உள்ளவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியுள்ள மாலைதீவு, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாட்டவர்களை உடனடியாக நாடு கடத்தல், பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் கற்கை நடவடிக்கைகள் தொடர்பில் சோதித்தல் உள்ளிட்ட விடயங்களும், இவ்வாறு அவரது யோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
29 minute ago
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
51 minute ago
3 hours ago