2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

O/L பரீட்சை இன்று முதல் 10 ஆம் திகதி வரை

S. Shivany   / 2021 மார்ச் 01 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று(01) ஆரம்பமாகிறது.

பரீட்சார்த்திகள் காலை 7.45 க்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருகைதர வேண்டுமென, பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 4,513 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. 

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 622,352 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 423,746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன் 198,606 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .