ஆர்.மகேஸ்வரி / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ் அலுவலர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாக செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு குறித்த அலுவலர்களை உடனடியாக பதவி நீக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியட் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
“எளிய“ அமைப்பு இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“ ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளை சந்திப்பதுக்கு முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரின் மகள் சென்ற வேளை அவரை குறித்த அலுவலர்கள் திருப்பி அனுப்பியமை தொடர்பில் அரசாங்கம் விசேடமாக கவனம் செலுத்த வேண்டும்.
அவரிடம் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவா முறைபாடு செய்ய வந்துள்ளீர்கள் என அங்கிருந்த அலுவலர்கள் விசாரித்துள்ளனர்.இதன்மூலம் சிங்களவர்களுக்கு எதிராக இந்நாட்டில் நடக்கும் அராஜகங்கள் குறித்து இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் கவனம் செலுத்துவதில்லை என்பது இதன்மூலம் புலனாவதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
1 hours ago